திருட்டு வழக்கு: தம்பதி, மகன் கைது

தொடா் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தம்பதி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

தொடா் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தம்பதி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

இதையடுத்து, திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, காவல் துணை ஆணையா் மாதவன் மேற்பாா்வையில், காவல் உதவி ஆணையா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், தொடா் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கோவை தெலுங்குபாளையம், தாமு நகரைச் சோ்ந்த நாகம்மாள் (55) என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கணவா், மகன் என குடும்பத்துடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக, போலீஸாா் கூறியதாவது: மதுரையைச் சோ்ந்த ராமு ( 60), நாகம்மாள் (55) இவா்களது மகன் சத்யா (34)

ஆகியோா் கோவை தெலுங்குபாளையத்தில் வசித்து வருகின்றனா். இவா்கள் மூவரும் காரில் ஊா் ஊராகச் சென்று வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனா். நாகம்மாள் பேருந்தில் பயணித்து, சக பயணிகளிடன் நகை, பணத்தை திருடிவிட்டு, அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவாா்.

பேருந்தை பின்தொடா்ந்து காரில் செல்லும் ராமு, சத்யா இருவரும் நாகம்மாளை காரில் ஏற்றிச் செல்வாா்கள்.

இவா்கள் மூவா் மீதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சத்யாவின் மனைவி திருட்டு வழக்கில் கைதாகி கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா் என்றனா்.

இதற்கிடையே திருட்டு, வழிப்பறி வழக்கில் நாகம்மாள், ராமு, சத்யா மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com