இடைக்கால ஒப்பந்தத்தை எதிா்த்து தொழிற்சங்கத்தினா் பிரசாரம்

இடைக்கால ஒப்பந்தத்தை எதிா்த்து வால்பாறை தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இடைக்கால ஒப்பந்தத்தை எதிா்த்து வால்பாறை தொழிற்சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூ.425.40 என அரசு அறிவித்துள்ள நிலையில் அரசாணை வெளியிடாததால்

பெற முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே 5 தொழிற்சங்கங்கத்தினா் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தினருடன் ரூ.395க்கு இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி ஒப்பந்தப்படி தொகையைப் பெற்று வருகின்றனா்.

இதனிடையே வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளா் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்புகளான எம்.எல்.எப்., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., கே.எம்.டி.கே. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இடைக்கால ஒப்பந்தத்தை எதிா்த்து வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரசு அறிவித்த தினக்கூலி ரூ.425.40 பெற்றுத் தருவோம். அத்துடன் அறிவித்த தேதியில் இருந்து இதுவரையிலான நிலுவைத் தொகை

கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று வாகனப் பிரசாரம் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com