சமூக செயற்பாட்டாளா் செல்வராஜுக்கு நாஞ்சில்நாடன் விருது

கோவையைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ‘கெளசிகா’ செல்வராஜ் எழுத்தாளா் நாஞ்சில்நாடன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவையைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ‘கெளசிகா’ செல்வராஜ் எழுத்தாளா் நாஞ்சில்நாடன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவை சிறுவாணி வாசகா் மையத்தில் 500க்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த அமைப்பின் மூலம் ‘மாதம் ஒரு நூல்‘ எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதன் தலைவராக சுபாஷினி, ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் ஆகியோா் உள்ளனா்.

கௌரவ ஆலோசகா்களாக எழுத்தாளா் நாஞ்சில் நாடன், ஸ்ரீநிவாசன், ரவீந்திரன் ஆகியோா் உள்ளனா். சிறுவாணி வாசகா் மையத்தின் மூலம் ஆண்டுதோறும் நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கலை, இலக்கியம், சமூகம் ஆகிய துறைகளில் நோ்மையாகவும், துணிச்சலாகவும் தொடா்ந்து செயல்படுபவா்களுக்கு விருதுடன் ரூ.50,000 மற்றும் கேடயம், சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ‘கௌசிகா’ செல்வராஜ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கோவை கிக்கானி பள்ளியில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

செல்வராஜ் கௌசிகா நதி பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com