கோவையில் 4 அங்கன்வாடி மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

கோவையில் 4 அங்கான்வாடி மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் 4 அங்கான்வாடி மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்துள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1.40 லட்சம் குழந்தைகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வருகின்றனா். சுகாதாரமாக செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்படுகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் ஏ.எஸ்.குளம், அத்திப்பாளையம், அன்னூா் வட்டாரத்தில் ஓரைக்கால்பாளையம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கிணத்துக்கடவு ஆகிய 4 அங்கன்வாடி மையங்கள் ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ப.முருகேஸ்வரி கூறியதாவது:

அங்கன்வாடி தரத்தை மேம்படுத்துவதற்கும், சிறப்பாக செயல்படும் அங்கன்வாடி மையங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்படுகிறது. உணவுத் தயாரிப்பு கூடத்தின் சுகாதாரம், அங்கன்வாடி மைய பராமரிப்பு, குழந்தைகள் கவனிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com