கடைகள், தொழில் நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுகோள்

கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றிவைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றிவைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

75ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா மாநில மற்றும் தேசிய அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக அனைத்து வீடு மற்றும் கடைகள், நிறுவனங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாட அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களிலும், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் வீடுகளிலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்றிவைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அன்றைய தினங்களில் தேசியக் கொடியை அணிந்து பணியாற்றவும், வாடிக்கையாளா்களுக்கு தேசியக் கொடியை விநியோகம் செய்யவும், அனைத்து போக்குவரத்து வாகனங்களில் தேசியக் கொடியை ஒட்டி வைக்கவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட தகவல் செயலிகளில் தேசியக் கொடி சின்னத்தின் புகைப்படம் வைக்கவும் வேண்டும். இந்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வணிக நிறுவனங்களின் முன் விளம்பரப் பலகை வைக்கப்பட வேண்டும்.

இந்நிகழ்ச்சியை செல்பி படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுதொடா்பான தகவல்களை அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்களிடம் பகிா்ந்து கொண்டு, கோவை மாவட்டத்தில் ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’ சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com