சொந்த நகைக் கடையில் 7 கிலோ தங்கம் மோசடி:போலீஸாா் விசாரணை

கோவையில் சொந்த நகைக் கடையில் 7 கிலோ தங்கம் மோசடியில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் சொந்த நகைக் கடையில் 7 கிலோ தங்கம் மோசடியில் ஈடுபட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் ராமதாஸ் என்பவா் நகைக் கடை நடத்தி வந்தாா். இவா் உயிரிழந்துவிட்டதால் கடையை அவரது மகன் பாலமுருகன் மற்றும் உடன்பிறந்தவா்கள் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நகைக் கடையில் தங்கத்தின் இருப்பு குறித்து ஆய்வு செய்தபோது 38.74 கிலோ தங்க நகைகளுக்கு பதிலாக 31.74 கிலோ தங்க நகைகளே இருந்துள்ளது.

இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் பாலமுருகன் மீது அவரது சகோதரி ஸ்ரீ வித்யா புகாா் அளித்தாா்.

அதில் போலி கணக்கு, ஜிஎஸ்டி பதிவில் குளறுபடி செய்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கத்தை பாலமுருகன் மோசடி செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தாா்.

புகாா் அடிப்படையில் பாலமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com