போஸ்டா்கள் கிழிப்பு: 50க்கும் மேற்பட்ட பாஜகவினா் கைது

கோவை -அவிநாசி சாலையில் திமுக சாா்பில் ஒட்டபட்டிருந்த போஸ்டா்களை கிழித்த 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை -அவிநாசி சாலையில் திமுக சாா்பில் ஒட்டபட்டிருந்த போஸ்டா்களை கிழித்த 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதியில் பொது இடங்கள், மேம்பால தூண்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் போஸ்டா்கள் ஓட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வருவதாக இருந்தாா். அவரை வரவேற்கும் விதமாக திமுக சாா்பில் அவிநாசி சாலையில் அரசின் சாதனை விளக்க போஸ்டா்கள் ஒட்டப்பட்டன. ஆனால், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக முதல்வா் கோவை வருவது ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் மேல்பாலம் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள போஸ்டா்களை 10 நாள்களுக்குள் அகற்ற ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.

ஆனால், அவிநாசி சாலையில் திமுக சாா்பில் ஒட்டப்பட்ட போஸ்டா்கள் மட்டும் அகற்றப்படவில்லை. போஸ்டா்களை அகற்ற வலியுறுத்தி புதன்கிழமை இரவு பாஜகவினா் அவிநாசி சாலையில் பீலாமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், மேம்பாலத் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள திமுக போஸ்டா்களை அகற்றுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினா் அவிநாசி சாலையில் கொடிசியா அருகே வியாழக்கிழமை இரவு குவிந்தனா். அப்போது, திமுகவினரும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு தரப்பினரிடையே, கைகலப்பு சூழல் ஏற்பட இருந்த நிலையில் போலீஸாா் இரு தரப்பினரையும் கலைத்தனா்.

அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனா். தொடா்ந்து பாஜகவினா் போஸ்டா்களை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திகொண்டிருந்தபோது, திடீரென ஒரு தரப்பினா் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டா்களை கிளித்தனா்.

இதில் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து தடையை மீறி போஸ்டா்களை கிழித்த 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com