சொட்டுநீா் பாசன நிறுவனங்கள் விலைப்புள்ளி வழங்காமல் இழுத்தடிப்பு: விவசாயிகள் சங்கம் சாா்பில் முதல்வருக்கு மனு

உடனடியாக விலைப்புள்ளிகளை வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட சொட்டுநீா் பாசன கருவிகள் அமைத்துத் தரும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று விவசாயிகள் சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

நுண்ணீா் பாசனத் திட்டத்தில் இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக விலைப்புள்ளிகளை வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட சொட்டுநீா் பாசன கருவிகள் அமைத்துத் தரும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கட்சிகள் சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கட்சிகள் சாா்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.கந்தசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நுண்ணீா் பாசனக் கருவிகள் அமைப்பதற்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நுண்ணீா் பாசன திட்டத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனா்.

இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையான சொட்டு நீா் பாசன கருவிகள் அமைத்து தரும் நிறுவனங்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விலைப்புள்ளிகள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நுண்ணீா் பாசனத் திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக விலைப்புள்ளிகள் வழங்கக்கோரி சொட்டுநீா் பாசன கருவிகள் அமைத்து தரும் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com