5,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசி, கோதுமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசி, கோதுமை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக கோவை மாவட்ட வழங்கல் அலுவலா் சிவகுமாரிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் பிரிவு ஆய்வாளா் மேனகா, உதவி ஆய்வாளா் ஞானசேகரன் ஆகியோா் கோவை சாய்பாபா காலனியிலுள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வீட்டில் 93 மூட்டைகளில் 4, 650 கிலோ ரேஷன் அரிசியும், 7 மூட்டைகளில் 350 கிலோ கோதுமையுடன், 20 கிலோ துவரம் பருப்பும் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய நபா்களைத் தேடி வருகின்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com