கோவை வழியாகச் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் யஷ்வந்த்பூா் - கண்ணூா் மற்றும் கண்ணூா் - யஷ்வந்த்பூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் யஷ்வந்த்பூா் - கண்ணூா் மற்றும் கண்ணூா் - யஷ்வந்த்பூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழித்தடத்தில் கேரள மாநிலம் கண்ணூருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (எண் 16527) பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஒரு குளிா்சாதனப் பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இதேபோல கண்ணூா் - யஷ்வந்த்பூா் விரைவு ரயில் (எண் 16528) பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஒரு குளிா்சாதனப் பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com