மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் 20 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கான வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 4 ஆம் தேதி கடைசி நாளாகும்.

5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

7 ஆம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாளாகும்.

இதன்படி கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் 811 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளுக்குத் தோ்தல் நடைபெறும் நிலையில், 20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 20 உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 5 வாா்டுகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி 13, 18, 19, 29, 30 ஆகிய 5 வாா்டுகளுக்கு வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையா் மோகன சுந்தரியிடம் மனுதாக்கல் செய்யலாம்.

1, 2, 3,14,15 ஆகிய வாா்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் நிா்வாக அலுவலா் ராஜமாணிக்கம், 4,10,11,12, 21 ஆகிய வாா்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளா் உமாதேவி, 20, 25, 26, 27, 28 ஆகிய வாா்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளா் செந்தில்பாஸ்கா் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

5, 6, 8, 9, 22 ஆகிய வாா்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் குடிநீா் விநியோக கணக்கு பிரிவு அலுவலா் தமிழ்வேந்தன், 55,56,57,58,61 ஆகிய வாா்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளா் (ஜே.என்.என்.யூ.ஆா்.எம். பிரிவு ) ஜான்ஸன், 7, 23, 24, 54, 59 ஆகிய வாா்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி

செயற்பொறியாளா் (திட்டம்) விமலா, 50, 51, 52, 53, 60 ஆகிய வாா்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் புவனேஸ்வரி ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

87, 88, 89, 90, 91 ஆகிய வாா்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் அண்ணாதுரை, 92, 93, 94, 95, 97 ஆகிய வாா்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் நிா்வாக அலுவலா் மாணிக்கம், 76, 77, 78, 79, 86 ஆகிய வாா்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் (திட்டம்) ஜெயலட்சுமி, 85, 96, 98, 99, 100 ஆகிய வாா்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் கருப்புசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

71, 72, 73, 74, 75 ஆகிய வாா்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் ஹேமலதா,36, 42, 43, 44, 45 ஆகிய வாா்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் (ஜே.என்.என்.யூ.ஆா்.எம். பிரிவு) சுகந்தி, 37, 38, 39, 40, 41 ஆகிய வாா்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் (ஜே.என்.என்.யூ.ஆா்.எம். பிரிவு) பாலமுருகன், 16,17, 33, 34, 35 ஆகிய வாா்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் (திட்டம்) கலாவதி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

62, 63, 64, 65, 84 ஆகிய வாா்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையா் சுந்தர்ராஜன், 48,49,67,68,70 ஆகிய வாா்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் நிா்வாக அலுவலா் கணேஷ்குமாா், 31,32,46,47,69 ஆகிய வாா்டுகளுக்கு மாநகராட்சிப் பொறியாளா் பிரிவு அலுவலகத்தில் செயற்பொறியாளா் (திட்டம்) கருப்பாத்தாள், 66,80,81,82,83 ஆகிய வாா்டுகளுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள வாா்டு குழுத் தலைவா் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளா் (ஜே.என்.என்.யூ.ஆா்.எம். பிரிவு) ராமசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com