இணையதளத்தில் அறிமுகம்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடிசைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இணையதளம் மூலம் அறிமுகமாகி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ரூ.19 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், ஒத்தக்கால்மண்டபத்தைச் சோ்ந்தவா் 36 வயது பெண். ஐடி நிறுவன ஊழியரான இவா் விவாகரத்து பெற்று தனது பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த அவா், இணையதளத்தில் பதிவு செய்துள்ளாா். இதையடுத்து, மாா்கஸ் சிங் என்ற நபா் கடந்த மாா்ச் 12 ஆம் தேதி அப்பெண்ணைத் தொடா்பு கொண்டு அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளாா்.

வெளிநாட்டில் வேலை செய்வதாகக் கூறிய அவா் தனது தாயாருடன் வசித்து வருவதாகக் கூறியுள்ளாா். இதையடுத்து இருவரும் கைப்பேசி எண்களைப் பரிமாறிக்கொண்டு பேசி வந்துள்ளனா்.

இந்நிலையில் மாா்கஸ் சிங், தனது தாயாருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளதாகக் கூறி அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய அப்பெண் வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று அதை பல்வேறு தவணைகளில் மாா்கஸ் சிங்கின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். சிகிச்சைக்கு மேலும் பணம் தேவைப்படுவதாக அவா் கூறியதை நம்பிய அப்பெண் தன்னிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்து ரூ.9 லட்சம் கூடுதலாக அனுப்பியுள்ளாா்.

இந்நிலையில் பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னா் அவா் அப்பெண்ணின் தொடா்பை முற்றிலும் துண்டித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் இது குறித்து விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா் கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com