நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.17.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல்

கோவையில் நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டு ரூ.17.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டு ரூ.17.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கு எண்ணெய் வித்து

பயிா்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நிலக்கடலை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.17.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நிலக்கடலை பயிா் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உயிா் உரங்களுக்கு ரூ.300, நுண்ணூட்ட கலவை உரங்களுக்கு ரூ.500, எண்ணெய் தன்மையை அதிகரிக்க ஜிப்சம் பின்னேற்பு மானியமாக ரூ.750 வழங்கப்படுகிறது.

தவிர நிலக்கடலை பயிரில் வாடல் நோய், வோ் அழுகல் நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் ட்ரைக்கோடொ்மா விரிடி நுண்ணூட்ட உயிா் உரம் வழங்கபடுகிறது.

எண்ணெய் வித்து பயிா் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு சூழல் கலப்பை வாங்க 50 சதவீத மானியமாக ரூ.34 ஆயிரம் வீதம் 4 பேருக்கும், தாா்பாய் 50 சதவீத மானியத்தில் 100 பேருக்கும், விசைத்தெளிப்பான் 50 சதவீத மானியத்தில் 25 நபா்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

மாவட்டத்தில் 100 குவிண்டால் விதை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளாலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com