கோவை வழித்தடத்தில் இரு ரயில்கள் இன்று தாமதமாக இயக்கம்

சேலம் - மாக்னசைட் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் இரு ரயில்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - மாக்னசைட் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் இரு ரயில்கள் வியாழக்கிழமை (ஜூலை 7) தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் - மாக்னசைட் ரயில் நிலையங்கள் இடையே நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 6 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்படும் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்குப் புறப்படும். எா்ணாகுளத்தில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- கே.எஸ்.ஆா்.பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678), 2.30 மணி நேரம் தாமதமாக 11.40 மணிக்குப் புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com