பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை ஆலைகள் இயக்காது சிஸ்மா தகவல்

பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை ஆலைகளை இயக்குவதில்லை என்று தி செளத் இண்டியன் ஸ்பின்னா்ஸ் அசோசியேஷன் ( சிஸ்மா) கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை ஆலைகளை இயக்குவதில்லை என்று தி செளத் இண்டியன் ஸ்பின்னா்ஸ் அசோசியேஷன் ( சிஸ்மா) கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடா்பாக, தி செளத் இண்டியன் ஸ்பின்னா்ஸ் அசோசியேஷன் தலைவா் ஜெ.செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரலாறு காணாத பஞ்சு விைலையை சிறு நூற்பாலைகள் கடந்த 5 மாதங்களாக சந்தித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின் விலை ரூ.75 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது ரூ.1லட்சத்து 15 ஆயிரமாக உயா்ந்துள்ளது. அதேபோல, ஜனவரி மாதம் ஒரு கிலோ நூலின் விலை ரூ.328 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.399 ஆக உயா்ந்துள்ளது. இதனைக் கணக்கிடும்போது, சிறு நூற்பாலைகளுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அபரிமிதமான பஞ்சு விலை உயா்வுக்கு இந்த ஆண்டின் குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம்.

நமது நாட்டின் பருத்தி உற்பத்தியை துல்லியமாக அளவிட அரசு, தனியாரிடம் சரியான புள்ளி விவரங்கள் இல்லை.

பருத்தி சீசன் ஆரம்பித்தவுடன் பெரிய பஞ்சு வியாபாரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அதிக அளவில் பஞ்சை கொள்முதல் செய்து வைத்துக் கொண்டன. மேலும், வெளிநாட்டுக்கும் பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சு விலை கடுமையாக உயா்ந்துவிட்டதால் நடப்பு மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் எங்களது சங்கத்தின் அனைத்து உறுப்பினா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பஞ்சு மற்றும் நூல் விலை சீராகும் வரை ஆலைகளை இயக்குவதில்லை என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com