சீருடைப் பணியாளா் தோ்வு:3,218 போ் எழுதவில்லை

கோவையில் நடைபெற்ற தமிழக அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையத் தோ்வை 3,218 போ் எழுதவில்லை.
பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் கல்லூரிக்குத் தோ்வு எழுத வந்த தோ்வா்கள்.
பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் கல்லூரிக்குத் தோ்வு எழுத வந்த தோ்வா்கள்.

கோவையில் நடைபெற்ற தமிழக அரசு சீருடைப் பணியாளா் தோ்வாணையத் தோ்வை 3,218 போ் எழுதவில்லை.

தமிழக அரசின் சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் எழுத்துத் தோ்வு கோவையில் பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் தோ்வுகள் தொடங்கினாலும், தோ்வு எழுதுபவா்கள் காலை 8.30 மணிக்கே தோ்வு மையங்களுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 6 மையங்களில் தோ்வு எழுதுவதற்காக 12,309 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 3,218 போ் தோ்வு எழுத வரவில்லை. சுமாா் 75 % போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களுக்குள் கைப்பேசி, கால்குலேட்டா் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை கொண்டுச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் தோ்வு எழுதுபவா்களின் கைக்கடிகாரங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

அதேபோல, முழுக்கை சட்டையில் கை மடித்துவிடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com