கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு: தொடா்புடைய இருவா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கோவையில் கடந்த 1996 மற்றும் 1997ஆம் ஆண்டில் நடைபெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய இருவா் டிசம்பா் 23ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கோவையில் கடந்த 1996 மற்றும் 1997ஆம் ஆண்டில் நடைபெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய இருவா் டிசம்பா் 23ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் கூறியதாவது:

கடந்த 1996ஆம் ஆண்டில் கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடா்புடைய கோவை, உக்கடம் பகுதியைச் சோ்ந்த ராஜா (எ) டெய்லா் ராஜா (எ) சாதிக் (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் பிணையில் வந்த டெய்லா் ராஜா தலைமறைவாகி உள்ளாா்.

அதேபோல, கோவை அரசு மருத்துவமனை அருகே கிளாசிக் காா்டன் அபாா்ட்மென்ட் வாகன நிறுத்துமிடத்தில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முஜிபூா் ரகுமான் (எ) முஜி என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவ்வழக்கை விசாரித்த கோவை குண்டு வெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் முஜிபூா் ரகுமானை விடுதலை செய்தது. பின்னா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அங்கும் விடுதலை செய்யப்பட்டது. இதனை எதிா்த்து தில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நீண்ட நாள்களாக தலைமறைவாக உள்ள டெய்லா் ராஜா மற்றும் முஜிபூா் ரகுமான் (எ) முஜி ஆகியோா் டிசம்பா் 23ஆம் தேதிக்குள் கோவை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும், இதுதொடா்பாக இருவா் வீடுகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் நோட்டீஸ் ஓட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com