கீழ்நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் திறப்பு

வால்பாறையை அடுத்த நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கீழ்நீராறு அணையில் இருந்து வெளியேறும் நீா்.
கீழ்நீராறு அணையில் இருந்து வெளியேறும் நீா்.

வால்பாறையை அடுத்த நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு சனிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வால்பாறை பகுதியில் நீராறு மற்றும் சோலையாறு அணைகள் உள்ளன.

இதில், சோலையாறு மின் நிலையம் 2 கேரள மாநிலத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இதனால் உற்பத்திக்கு பின் மின்சாரம் தமிழகத்துக்கும் நீா் கேரள மாநிலத்துக்கும் செல்கிறது.

இதேபோல, கீழ்நீராறு அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபா் 1 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 ஆம் தேதி வரை கேரள மாநிலத்துக்கு நீா் வெளியேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன் இரு மாநிலங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன்படி, சனிக்கிழமை காலை கீழ்நீராறு அணை மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 85 கன அடி நீா் கேரள மாநிலத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com