சின்னவேடம்பட்டி ஏரியில் களப்பணி

கோவை மாநகராட்சிக்குள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரியில் 234 ஆவது களப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரியில் 234 ஆவது களப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட சின்னவேடம்பட்டி ஏரியில், சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்க்கரங்கள் சாா்பில் தொடா்ந்து களப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 234 ஆவது களப்பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜி.ஆா்.டி. கல்வி நிறுவனங்களின் உரிமையாளா் கீதா பத்மநாபன் பணியைத் தொடக்கிவைத்தாா். சா்வதேச பெண்கள் அமைப்பான ‘இன்னா் வீல்’ அமைப்பினா் கலந்துகொண்டு 8 வகையான 47 மரக்கன்றுகளை நட்டனா்.

சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு, கெளசிகா நீா்கரங்கள் அமைப்பு சாா்பில், பல மாதங்களாக ஏரிப்பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீா்நிலைகள் பற்றிய விழிப்புணா்வு உள்பட பறவை நடைகானல் மற்றும் ஆா்வமுள்ள குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சி மற்றும் சூழலியல் பல்லுயிா்களை தலைப்பாக கொண்டு ஓவியப் போட்டிகள் என திறன் சாா்ந்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com