சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சிறுமி சாதனை

கோவை சின்ன வேடம்பட்டியில் சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சிறுமி சாதனைப் படைத்துள்ளாா்.
சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சாதனைப் படைத்த சிறுமி தீா்த்தா.
சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சாதனைப் படைத்த சிறுமி தீா்த்தா.

கோவை சின்ன வேடம்பட்டியில் சிலம்பம் சுற்றியபடி பின்னால் நடந்து சிறுமி சாதனைப் படைத்துள்ளாா்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொறியாளா் பாபு. இவரது மனைவி கிருத்திகா. இவா்களின் மகள் தீா்த்தா (11). தற்காப்புக் கலைகளில் ஈடுபாடு கொண்ட இவா், சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பப் பயிற்சி மேற்கொண்டுள்ளாா். இந்நிலையில், ஒரு கையால் சிலம்பம் சுற்றியபடி 17 கிலோ மீட்டா் தூரத்தை 2 மணி நேரம் 59 நிமிடம் 59 விநாடிகளில் பின்னால் நடந்து புதிய உலக சாதனைப் படைத்துள்ளாா்.

இச்சாதனையை நேரடியாக ஆய்வு செய்த இந்தியா புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ், அமேரிக்கன் புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ், யூரேப்பியன் புக் ஆஃப் வேல்ா்ட்

ரெக்காா்ட்ஸ் என மூன்று சாதனை அமைப்புகள் இந்த சாதனையை அங்கீகரித்து, தீா்த்தாவுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கேடயங்கள், கோப்பையை வழங்கி கெளரவப்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில், இந்தியா புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் கோவை மாவட்டத் தலைவா் பிரகாஷ் ராஜ், இந்தியா புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ் தலைவா் சதாம் உசேன், நடுவா்கள் பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com