விண்வெளி வார விழா தொடக்கம்

கோவையில் விண்வெளி வார தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விண்வெளி வார விழா தொடக்கம்

கோவையில் விண்வெளி வார தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபா் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் (ஸ்பேஸ் வீக்) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவையில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசாா், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, கோவை அஸ்ட்ரோ கிளப், எஸ்.என்.எம்.வி. கலை, அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை ஆகியவற்றின் சாா்பில் விண்வெளி வார விழா நடத்தப்படுகிறது.

எஸ்.என்.எம்.வி. கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரியின் முதல்வா் போ.சுப்பிரமணி தலைமை வகித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் க.லெனின்பாரதி வரவேற்றாா். கோவை அஸ்ட்ரோ கிளப் தலைவா் ஜி.ரமேஷ் உலக விண்வெளி வாரம் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் வான் நோக்கும் நிகழ்வுகளுக்காக அஸ்ட்ரோ கிளப்பிற்கு நுண்ணா்வுமிக்க தொலைநோக்கியை மிராபிள் நிறுவனத் தலைவா் அபிலாஷ் கிருஷ்ணன் நன்கொடையாக வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து விண்வெளியின் நிலைத்தன்மை என்ற தலைப்பில் வானியல் கருத்தாளா் ப.ஜெயமுருகன் சிறப்புரையாற்றினாா். அஸ்ட்ரோ கிளப் செயலா் சாய் லட்சுமி, ஆலோசகா்கள் கே.சக்திவேல், ரமேசன், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வானியல் ஆா்வலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

விண்வெளி வாரத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள், மாணவா்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கி மூலம் வான்நோக்கு நிகழ்வு, எளிய அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சி போன்றவை வெள்ளலூரில் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 7.30 வரை நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com