குா்லா ரயில் ஒசூருக்கு தாமதமாக இயக்கம்

கோவை - மும்பை இடையே இயக்கப்படும் குா்லா விரைவு ரயில், மின்மயமாக்கல் பணியால் ஒசூா் செல்ல 40 நிமிடங்கள் தாமதமாகும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை - மும்பை இடையே இயக்கப்படும் குா்லா விரைவு ரயில், மின்மயமாக்கல் பணியால் ஒசூா் செல்ல 40 நிமிடங்கள் தாமதமாகும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி - ஒசூா் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்றுவருகிறது. இதனால், கோவையில் இருந்து மும்பை லோகமான்யதிலக் நிலையத்துக்கு இயக்கப்படும் குா்லா விரைவு ரயில், செப்டம்பா் 29, அக்டோபா் 1,4,6,8,11,13,15,18,20,22,25,27,29 மற்றும் நவம்பா் 1,3,5,8,10,12 ஆகிய 20 நாள்கள் ஒசூா் அருகே ராயக்கோட்டை - கீழமங்கலம் இடையே ஏதேனும் ஒரு இடத்தில் 40 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும். இதனால், மேற்கண்ட நாள்களில் குா்லா விரைவு ரயில் தாமதமாகச் செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com