தேசிய சமரச தினத்தை முன்னிட்டு 9 ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 08th April 2022 01:44 AM | Last Updated : 08th April 2022 01:44 AM | அ+அ அ- |

தேசிய சமரச தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) நீதிபதிகள், வழக்குரைஞா்கள் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மாவட்ட சமரச தீா்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற சமரச தீா்வு மைய வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்ட சமரச தீா்வு மையம் சாா்பில் வருகின்ற 9 ஆம் தேதி தேசிய சமரச தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 10 மணிக்கு
நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்படும்.
சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு சமரச மையத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு வகுப்புகள், விழிப்புணா்வு நாடகம் போன்றவை பாா் அசோசியேஷன் அறையில் நடைபெறும்.
சனிக்கிழமை நடைபெறும் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட நீதிபதி துவங்கிவைக்க உள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.