பொள்ளாச்சி-பாலக்காடு சாலை மேம்பாலம் திறப்பு

 பொள்ளாச்சி -பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
பொள்ளாச்சி-பாலக்காடு சாலை மேம்பாலம் திறப்பு

 பொள்ளாச்சி -பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

பொள்ளாச்சி -பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் பொள்ளாச்சி-கோவை ரயில் வழித்தடத்தில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், ரயில் வரும் நேரங்களில் கேரளம் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதனையடுத்து, கடந்த 2016-17ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.48. 48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.

தற்போது, மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சென்னையில் இருந்து கானொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மருத்துவா் வரதராஜன், நகராட்சித் தலைவா் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com