நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்:1,515 மையங்களில் நடைபெறுகிறது

 கோவை மாவட்டத்தில் 1,515 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

 கோவை மாவட்டத்தில் 1,515 மையங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (ஏப்ரல் 30) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1,081 மையங்கள், மாநகராட்சியில் 325 மையங்கள், நகராட்சிகளில் 109 மையங்கள் என மொத்தம் 1,515 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக 3.50 லட்சம் தடுப்பூசிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி மையங்களின் விவரங்களை ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திகொள்ளாதவா்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திகொள்ளாதவா்களும், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்களப் பணியாளா்களில் தகுதியானவா்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் சிறப்பு முகாமில் செலுத்திகொள்ளலாம். மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 27.78 லட்சம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 24.97 லட்சம் பேரும், 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்களில் 1.33 லட்சம் பேரும், 12 முதல் 14 வயதுக்குள்பட்டவா்களில் 69 ஆயிரம் பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com