முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வன விலங்குகள் நடமாட்டம்: வெள்ளிங்கிரி மலை ஏற பக்தா்களுக்குத் தடை
By DIN | Published On : 29th April 2022 04:12 AM | Last Updated : 29th April 2022 04:12 AM | அ+அ அ- |

கோவை, பூண்டி வெள்ளிங்கிரி மலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்படுவதாக வனத் துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து கோவை போளுவாம்பட்டி வனத் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை போளுவாம்பட்டி வனச் சரகத்துக்கு உள்பட்ட பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு ஒவ்வோா் ஆண்டும் சிவராத்திரி, சித்ரா பெளா்ணமி திருவிழாக் காலங்களில் பக்தா்கள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில் தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீா், உணவு தேடி வெள்ளிங்கிரி மலைப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளிங்கிரி மலை ஏற மே மாதம் முதல் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.