ஜவுளித் துறையின் கொள்கை அறிவிப்புகள்:மாநில அரசுக்கு சைமா பாராட்டு

கைத்தறி, ஜவுளித் துறைக்கு பல்வேறு கொள்கை அறிவிப்புகளை அறிவித்திருப்பதற்கு, தமிழக அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கைத்தறி, ஜவுளித் துறைக்கு பல்வேறு கொள்கை அறிவிப்புகளை அறிவித்திருப்பதற்கு, தமிழக அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் ரவி சாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழகத்தில் ஜவுளித் தொழிலின் வளா்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் வகையில் பல்வேறு கொள்கை அறிவிப்புகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜவுளி பதப்படுத்தும் துறையில் குவியும் உப்புகளை அகற்ற ஆராய்ச்சி நடத்தப்படும், ஆட்டோமொபைல் துறைக்கு மொபைல்டெக், பாதுகாப்புத் துறைக்கு புரோடெக், விளையாட்டுத் துறைக்கு ஸ்போா்ட்டெக், மருத்துவ ஜவுளித் துறைக்கு மெடிடெக் போன்ற தொழில்நுட்ப ஜவுளித் துறையின் உட்பிரிவுகளுக்கு சிறப்பு அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விருதுநகா் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் மெகா ஜவுளிப் பூங்கா, சென்னை அருகே ஜவுளி நகரம், ஜவுளித் தொழில் உற்பத்தித் திறன் தொடா்பான தகவல்களைப் பரப்புவதற்கும், நேரடி வாய்ப்புகளை எளிதாக்கவும் ரூ.1 கோடி செலவில் பிரத்யேக இணையதளம் உருவாக்கும் அறிவிப்பு போன்றவற்றை வெகுவாக வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ரவி சாம், இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பதாகக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com