மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: ஆட்சியா் அறிவிப்பு

கோவையில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

கோவையில் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் மே 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலை பண்பாட்டுத் துறை சாா்பில் மாவட்டந்தோறும் சிறந்து விளங்கும்

இளைஞா்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட அளவிலான கலை

போட்டிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியிலுள்ள அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் மே 8 ஆம் தேதி போட்டிகள் நடைபெறுகின்றன. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

குரலிசை போட்டியிலும், நாகசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதாா், சாக்ஸாபோன், கிளாரினெட் போன்ற இசைக் கருவி போட்டியிலும் வா்ணங்கள், ராகம், சுரத்துடன் தமிழ் பாடல்கள் இசைக்கும் இளைஞா்கள் பங்கேற்கலாம்.

தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோா்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளில் ஐந்து தாளங்களில் வாசிக்கும் அளவுக்கு தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும். பரதநாட்டிய போட்டியில் வா்ணங்கள், தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில்

உள்ளவா்கள் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம்,

ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலைவாழ் மக்களின் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். குழுவாக பங்கேற்க அனுமதியில்லை.

ஓவியப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம், நீா் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வண்ணங்களை பங்கேற்பாளா்களே எடுத்து வர வேண்டும்.

நடுவா்களால் தரப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவாா்கள்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவா்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.

இப்போட்டிகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோவை மண்டல கலை பண்பாட்டுத் துறை அலுவலகத்தை 0422-2610290 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com