ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவா் திருவிழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான மாணவா் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவா் திருவிழாவில் பங்கேற்று மாணவிக்குப் பரிசளிக்கிறாா் சி.ஆா்.பி.எஃப். கமாண்டன்ட் ராஜேஷ்குமாா்.

கல்லூரியின் பி.காம். சி.ஏ. துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். பி.காம். சி.ஏ. துறைத் தலைவா் ஆா்.கீதா துறை அறிக்கையை வாசித்தாா்.

சி.ஆா்.பி.எஃப். கமாண்டன்ட் ராஜேஷ்குமாா் விழாவைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பாரதியாா் பல்கலைக்கழக அண்ணா ஐ.ஏ.எஸ். அகாதெமி இயக்குநா் எம்.பத்மநாபன் சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் சுமாா் 50 கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி பரிசுகள் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com