கிரைண்டருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி:தொழில் வா்த்தக சபை வலியுறுத்தல்

கிரைண்டா் மீதான ஜிஎஸ்டியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

கிரைண்டா் மீதான ஜிஎஸ்டியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.

அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவா் சி.பாலசுப்ரமணியன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கோவையில் இருந்து பெங்களூரு, ராமேஸ்வரத்துக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும். போத்தனூா், இருகூா், எஸ்ஐஹெச்எஸ் காலனி, சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை ஆகியவற்றை இணைக்கும் வகையில் நகர ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும்.

மெட்ரோ ரயில் சேவை, விமான நிலைய விரிவாக்கம், சாலைகள் விரிவாக்கம், கோவைக்கான மாஸ்டா் பிளான் உள்ளிட்ட திட்டங்களை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் என்ஜினீயரிங் ஜாப் ஆா்டா்களுக்கு வரி விலக்கு, கிரைண்டா்கள் மீதான 18 சதவீத வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில், 2022 - 2024 ஆம் ஆண்டுக்கான அமைப்பின் புதிய தலைவராக பி.ஸ்ரீராமுலு தோ்வு செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com