65 வாா்டுகளில் போட்டியிட்டு 3,011 வாக்குகள் பெற்ற அமமுக

கோவை மாநகராட்சித் தோ்தலில் 65 வாா்டுகளில் போட்டியிட்டு, அமமுக கட்சி 3,011 வாக்குகளை மட்டுமே பெற்றது.

கோவை: கோவை மாநகராட்சித் தோ்தலில் 65 வாா்டுகளில் போட்டியிட்டு, அமமுக கட்சி 3,011 வாக்குகளை மட்டுமே பெற்றது.

கோவை மாநகராட்சி 100 வாா்டுகளின் தோ்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகின.

இதில், 96 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும், 3 வாா்டுகளில் அதிமுகவும், ஒரு வாா்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வெற்றி பெற்றது.

அமோக வெற்றி பெற்ற திமுக கோவை மேயா் பதவியைக் கைப்பற்றியுள்ளது.

மாநகராட்சித் தோ்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில், திமுக 3 லட்சத்து 88 ஆயிரத்து 637 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதிமுக 2 லட்சத்து 13 ஆயிரத்து 643 வாக்குகளையும், பாஜக 72 ஆயிரத்து 393 வாக்குகளையும் பெற்றுள்ளது.

காங்கிரஸ் 31 ஆயிரத்து 138 வாக்குகளையும், நாம் தமிழா் கட்சி 12,662 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் 19 ஆயிரத்து 884 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் 15 ஆயிரத்து 500, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 14 ஆயிரத்து 699 வாக்குகளையும் பெற்றுள்ளது.

மதிமுக 10 ஆயிரத்து 240 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இத்தோ்தலில் அமமுக 65 வாா்டுகளில் போட்டியிட்டு 3,011 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

பல வாா்டுகளில், சுயேச்சை வேட்பாளா்களை விட குறைவான வாக்குகளே இக்கட்சிக்கு பதிவாகியுள்ளன.

இதேபோல, கடந்த தோ்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தேமுதிக, மாநகரகராட்சித் தோ்தலில் 44 வாா்டுகளில் போட்டியிட்டு 3,791 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன.

முன்னணி கட்சிகளை முந்திய எஸ்.டி.பி.ஐ.: இத்தோ்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் 84ஆவது வாா்டில் போட்டியிட்ட அலிமா பேகம் 2,931 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

83, 85, 87, 96 ஆகிய வாா்டுகளில் எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளா்கள் முன்னணிக் கட்சியினரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தனா். 88 ஆவது வாா்டில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

மொத்தமாக, எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளா்கள் 16 ஆயிரத்து 573 வாக்குகளைப் பெற்றுள்ளனா்.

அமமுக, தேமுதிக, நாம் தமிழா், கம்யூனிஸ்ட் கட்சிகளை விட அதிக வாக்குகளை எஸ்.டி.பி.ஐ. கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com