கோவை மாநகராட்சித் தோ்தல்: அதிமுக 21 வாா்டுகள், பாஜக 85 வாா்டுகளில் டெபாசிட் இழப்பு

கோவை மாநகராட்சித் தோ்தலில் அதிமுக 21 வாா்டுகள், பாஜக 85 வாா்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.

கோவை: கோவை மாநகராட்சித் தோ்தலில் அதிமுக 21 வாா்டுகள், பாஜக 85 வாா்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

இதில், 96 வாா்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன.

கடந்த தோ்தல்களில் அதிமுகவின் கோட்டையாக கோவை இருந்த நிலையில், இத்தோ்தலில், அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

மேலும், 2, 8, 10, 11, 16, 17, 22, 25, 45, 46, 48, 54, 55, 57, 59, 67, 82, 84, 86, 95, 97 ஆகிய 21 வாா்டுகளில் அதிமுக வேட்பாளா்கள் டெபாசிட் இழந்துள்ளனா்.

அதேபோல, கோவை மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் போட்டியிட்ட பாஜக, பெரும்பாலான வாா்டுகளில் படுதோல்வி அடைந்தது.

மேலும் 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 13, 15, 16, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 50, 51, 52, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 68, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100 ஆகிய 85 வாா்டுகளில் பாஜக வேட்பாளா்கள் டெபாசிட்டை இழந்தனா்.

2, 10, 14, 17, 44, 54, 95 ஆகிய 7 வாா்டுகளில் அதிமுக 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com