ரூ.2.59 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்: கோவையில் நால்வா் கைது

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.2.59 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த நால்வரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் ரூ.2.59 கோடி மதிப்புள்ள 4.9 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த நால்வரை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், ஏா் அரேபியா விமானத்தில் கோவைக்கு வியாழக்கிழமை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில் சந்தேகத்துக்கிடமான, கோவையைச் சோ்ந்த உமா (34), கடலூரைச் சோ்ந்த பாரதி (23), தஞ்சாவூரைச் சோ்ந்த திருமூா்த்தி (26), திருச்சியைச் சோ்ந்த விக்னேஷ் கணபதி (29) ஆகியோரிடம் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில் அவா்கள் கால் முட்டிக்கு அணியும் பேண்டேஜ், ஜீன்ஸ் பேண்டுக்குள் மறைத்து வைத்து 4.9 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.2.59 கோடி என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com