கரோனா விதிமீறல்:துணிக்கடை ஊழியா்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
By DIN | Published On : 04th January 2022 05:14 AM | Last Updated : 04th January 2022 05:14 AM | அ+அ அ- |

கோவை ஒப்பணக்கார வீதியிலுள்ள துணிக்கடையில் முகக் கவசம் அணியாத 25 ஊழியா்களுக்கு மாநகராட்சி சாா்பில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை ஒப்பணக்கார வீதியில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது துணிக்கடையில் பணியாற்றிய 25 போ் முகக் கவசம் அணியாமல் இருந்துள்ளனா். இவா்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.