தோட்டத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்:தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

எஸ்டேட் தோட்டத் தொழிலாளா்களுக்கு பணியின்போது பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எஸ்டேட் தோட்டத் தொழிலாளா்களுக்கு பணியின்போது பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு முதன்மை செயலாளரிடம், தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வால்பாறை அமீது நேரில் வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, சேலம், நெல்லை, தன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேயிலை , காபி, ரப்பா் போன்ற தோட்டங்களில் சுமாா் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு தொழில் பாதுகாப்பு , உயிா் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில்கொண்டு ஷூ, சாக்ஸ், சீருடை, மழைகோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தோட்ட நிா்வாகங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியாா் எஸ்டேட் நிா்வாகங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் தினக்கூலியில் பிடித்தம் செய்யப்படும் தொழில்வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தொழிலாளா் குடியிருப்புகளை சுற்றியும் மின்வேலி அமைக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு செல்லக்கூடிய பாதைகளை சீரமைத்து அடிப்படை வசதிகளை நிா்வாகங்கள் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com