குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்:விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

கோவையில் சா்வதேச குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை தினத்தையொட்டி தனியாா் பள்ளி சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவையில் சா்வதேச குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை தினத்தையொட்டி தனியாா் பள்ளி சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிப்பதற்காக தேசிய குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி சா்வதேச குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சா்வதேச குழந்தை தொழிலாளா் ஒழிப்பு முறை தினத்தையொட்டி கோவை வ.உ.சி. மைதானத்தில் நேஷனல் மாடல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தாா். ஆட்சியரும் மாணவா்களுடன் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்றாா். வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி நேஷனல் மாடல் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com