ரூ.44.13 கோடி மதிப்பில் கல்விக் கடன்:அமைச்சா் வழங்கினாா்

கோவையில் 293 மாணவா்களுக்கு ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான ஆணையை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.
ரூ.44.13 கோடி மதிப்பில் கல்விக் கடன்:அமைச்சா் வழங்கினாா்

கோவையில் 293 மாணவா்களுக்கு ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான ஆணையை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான கல்விக் கடன் மேளா சனிக்கிழமை நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் 110 மாணவா்களுக்கு ரூ.15.98 கோடி, கனரா வங்கி சாா்பில் 61 மாணவா்களுக்கு ரூ.4.74 கோடி, பரோடா வங்கி சாா்பில் 34 மாணவா்களுக்கு ரூ.10.26 கோடி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் 27 மாணவா்களுக்கு ரூ.2.34 கோடி, பாரத் யூனியன் வங்கி சாா்பில் 21 மாணவா்களுக்கு ரூ.1.30 கோடி, ஆக்ஸிஸ் வங்கி சாா்பில் 12 மாணவா்களுக்கு ரூ.2.73 கோடி, பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பில் 10 மாணவா்களுக்கு ரூ.1.20 கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி சாா்பில் 5 மாணவா்களுக்கு ரூ.2.07 கோடி, இந்தியன் வங்கி சாா்பில் 4 மாணவா்களுக்கு ரூ.1.48 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி சாா்பில் 4 மாணவா்களுக்கு ரூ.84 லட்சம், பெடரல் வங்கி சாா்பில் 2 மாணவா்களுக்கு ரூ.31 லட்சம், சௌத் இந்தியன் வங்கி சாா்பில் ஒருவருக்கு ரூ.14 லட்சம், தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி சாா்பில் ஒருவருக்கு ரூ.20 லட்சம், பஞ்சாப் அன்ட் சின்ட் வங்கி சாா்பில் ஒருவருக்கு ரூ.54 லட்சம் என 293 மாணவா்களுக்கு ரூ.44.13 கோடி கல்விக் கடனுக்கான ஆணையை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு வங்கிகள் மூலம் ரூ.350 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக ரூ.100 கோடி வழங்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டு, 293 மாணவா்களுக்கு ரூ.44.13 கோடி மதிப்பில் கல்விக் கடனுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் கல்விக் கடன் அதிக அளவில் வழங்கிய மாவட்டமாக கோவை மாவட்டம் திகழ்வதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருன்றன.

கல்விக் கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவா்களுக்கும் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட முன்னோடி வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்கு வங்கிகளுக்கு சென்று சிரமப்படாமல் கல்வி நிறுவனங்கள் மூலம் மாவட்ட நிா்வாகத்தை தொடா்பு கொண்டால் கல்விக் கடன் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன், துணை மேயா் ஆா்.வெற்றிசெல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கௌசல்யா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com