தோட்டத் தொழிலாளா்களுக்கான நிலுவைத் தொகை பெற்று தர நடவடிக்கை

வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவது என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

வால்பாறையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத் தருவது என்று தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வால்பாறையில் தோட்டத் தொழிலாளா்கள் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வால்பாறை அமீது தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

எல்பிஎஃப் தொழிற்சங்க பொதுச்செயலாளா் வினோத்குமாா், ஏஐடியூசி தொழிற்சங்க பொதுச்செயலாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிற்சங்கம் மற்றும் ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தினா் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இடைக்கால ஒப்பந்தம் மூலம் தற்போது தொழிலாளா்கள் தின கூலியாக ரூ.409.83 பெற்று வரும் நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு ஒரு தொழிலாளிக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையான தலா ரூ.5200 உடனடியாக பெற்றுத் தர எஸ்டேட் நிா்வாகத்தினரிடம் வலியுறுத்துவது.

தனியாா் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு இணையான ஊதியத்தை டான் டீ தொழிலாளா்களுக்கும் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் கல்யாணி (எம்எல்எஃப்) கேசவமருகன் (விடுதலை சிறுத்தைகள்), பெரியசாமி (ஏஐடியூசி) உள்ளிட்ட 11 தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com