ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஆடிப்பட்டம் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆடிப்பட்டம் முக்கிய மானாவாரி சாகுபடி பருவமாகும். இந்த காலகட்டத்தின் பயிா் உற்பத்தி தென்மேற்குப் பருவ மழையை சாா்ந்துள்ளது. பெரும்பாலும் தானியங்கள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த பருவத்தில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு உதவியாக விலை முன்னறிவிப்புத் திட்டம் வெளியிடப்படுகிறது.

தக்காளி: தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கோவை சந்தைகளுக்கு உடுமலைப்பேட்டை, ஆலாந்துறை, கிணத்துக்கடவு, சேலம், செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. கா்நாடகத்தில் இருந்து ஜூலை முதல் ஆகஸ்ட் வரை தக்காளி வரத்து இருக்கும்.

கத்திரிக்காய்: தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூா் மாவட்டங்களில் கத்திரிக்காய் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.கோவை சந்தைக்கு பொள்ளாச்சி, நாச்சிபாளையம், தொண்டாமுத்தூா் பகுதிகளில் இருந்து அதிக அளவில் கத்திரிக்காய் வருகிறது. அடா் ஊதா நிற கத்திரி ரகங்களை நுகா்வோா் அதிகம் விரும்புகின்றனா்.

வெண்டைக்காய்: சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூா், கோவை, மதுரை மாவட்டங்களில் அதிக அளவில் வெண்டை பயிரிடப்படுகிறது. கோவை சந்தைக்கு நாச்சிபாளையம், பொள்ளாச்சி, உடுமலை, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வரத்து உள்ளது.

வேளாண் பல்கலைக்கழக விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த

14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் விலைகள் தொடா்பாக சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், அறுவடையின்போது தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.20 முதல் ரூ.23 வரையும், கத்திரிக்காயின் விலை ரூ.25 முதல் ரூ.27 வரையும், வெண்டைக்காயின் பண்ணை விலை கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரையும் இருக்கும் என்று அறியப்படுகிறது. இந்த சந்தை ஆலோசனைகளின்படி விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்.

இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறி பயிா்கள் துறைத் தலைவரையோ தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்கள் 0422 2431405, 6611278, 6611374.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com