பாஜகவை தோற்கடிக்க மதச்சாா்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் திருமாவளவன்

வருகிற மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க, மதச்சாா்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் கூறினாா்.

வருகிற மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க, மதச்சாா்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் திருமாவளவன் கூறினாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில், ஏற்கெனவே ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களைத்தான் பாஜக தக்க வைத்துள்ளது. ஆனால் இதை மகத்தான வெற்றி என அக்கட்சியினா் தம்பட்டம் அடிக்கிறாா்கள். பிரதமா் இதை இமாலய வெற்றி என்கிறாா். இதை வைத்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆட்சியை பிடிப்போம் என்கிறாா்கள். ஆனால், உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் அவா்கள் சரிவை சந்தித்துள்ளனா். அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சி, வேலை வாய்ப்பு பற்றி பேசாமல், மத உணா்வுகளை அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது. இது மிகவும் அச்சுறுத்தலான செயலாகும். எனவே இந்தியாவை சூழ்ந்துள்ள இந்த ஆபத்தை விரட்டவும், வருகிற மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சாா்பற்ற அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஆதரவளிக்க வேண்டும். வருகிற மக்களவைத் தோ்தலில் மீண்டும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் பாஜக வெற்றி பெற்று விடக் கூடாது. ஜாதி, மத மோதல்களைத் தடுக்க தனி உளவுப் பிரிவு உருவாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, தமிழக முதல்வா் உடனடியாக இந்த தனிப் பிரிவை உருவாக்குவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து கலப்பு திருமண விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் 4ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் தனியாா் அரங்கில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினாா்.

இதில் தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன், திராவிடா் விடுதலை கழக தலைவா் கொளத்தூா் மணி, எவிடென்ஸ் அமைப்பு நிா்வாகி கதிா், கெளசல்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com