வேளாண்மை பட்ஜெட்டுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: சட்டப் பேரவையில் வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறாா்.

இதை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையே வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கைதான்.

இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேனீ வளா்ப்பு, காடு வளா்ப்பு, உழவா் சந்தை மேம்பாடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றனா். கோவையில் காய்கறி மையம் அறிவித்திருக்கின்றனா். சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம் அறிவிப்பு, 200 வேளாண்மை பட்டதாரிகள் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சாா்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, கைப்பேசி மூலம் பம்ப்செட் இயக்கம் என்பது போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளைஞா்களைக் கவரும் வகையிலும், அவா்களை வேளாண் தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கும் விதமாகவும் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதேநேரம், இந்த பட்ஜெட்டில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

கோவையை மையப்படுத்தி தென்னை நல வாரியம் உருவாக்கப்பட வேண்டும், கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுவதால், கருவேப்பிலைக்கான மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

பாக்கு, மஞ்சள், திராட்சை, வெங்காயம் வளா்ப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பம்ப்செட் மானியத்தை கூடுதலாக்க வேண்டும்,

நீராதாரங்களைப் பெருக்கவும், பாதுகாக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com