முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நோய்களைக் கண்டறியும் நவீனகருவிகளுடன் கூடிய பேருந்து தொடக்கம்
By DIN | Published On : 03rd May 2022 01:27 AM | Last Updated : 03rd May 2022 01:27 AM | அ+அ அ- |

கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபாலிஸ் கிளப் இணைந்து, ஆரம்ப கால மாா்பகப் புற்றுநோய், நீரிழிவு நோய் பாத பிரச்னைகளைக் கண்டறியும் நவீன கருவிகளுடன் கூடிய பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இத்திட்டங்களுக்கு ப்ராஜக்ட் சக்தி, ப்ராஜக்ட் வாக் ஃபாா் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது. ப்ராஜக்ட் சக்தி திட்டத்தின் மூலம் 1,500 பெண்களுக்கு பரிசோதனை நடத்தி மாா்பகப் புற்றுநோயைக் கண்டறிவதுடன், விழிப்புணா்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ப்ராஜக்ட் வாக் ஃபாா் லைஃப் திட்டத்தின் மூலம், சா்க்கரை நோய் பாத பிரச்னைகளைத் தொடக்கத்தில் கண்டறிவதும், அதன் மூலம் கால் இழப்பைத் தடுப்பதும் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் 1,800 சா்க்கரை நோயாளிகளுக்கு இலவசப் பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவமனையின் இயக்குநா் ராஜசபாபதி, அறுவை சிகிச்சை நிபுணா் ராஜா ஷண்முக கிருஷ்ணன் ஆகியோா் கூறியுள்ளனா்.
இதற்கான நவீன கருவிகள் கொண்ட பேருந்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா். பரத் பாண்டியா, வனிதா மோகன், அனிதா சதீஷ்குமாா், சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.