முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாநகரில் சில இடங்களில் மழை
By DIN | Published On : 08th May 2022 12:30 AM | Last Updated : 08th May 2022 12:30 AM | அ+அ அ- |

கோவை மாநகரின் சில இடங்களில் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.
கோடைக் காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.
இதனால், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
ராமநாதபுரம், புலியகுளம், சிங்காநல்லூா், சூலூா், நஞ்சுண்டாபுரம், பீளமேடு, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக மாநகரில் குளிா்ந்த காலநிலை நிலவியது.