பஞ்சாலைகளுக்கு நேரடியாக பருத்தி விநியோகம் குறித்து பரிசீலிக்கப்படும்நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

நிகழ்ச்சியில் சிஸ்பா, விசைத்தறி தொழில் கூட்டமைப்பு, கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பஞ்சாலைகளுக்கு நேரடியாக பருத்தி விநியோகம் குறித்து பரிசீலிக்கப்படும்நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்திய பஞ்சாலைக் கழகத்திடம் இருந்து பஞ்சாலைகள் நேரடியாகப் பருத்தியை வாங்கிக் கொள்ள சட்ட ரீதியிலான சாத்தியக்கூறு உள்ளதா என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளாா்.

தமிழக ஜவுளித் தொழில்முனைவோா் சாா்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு கோவையில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. கரோனா காலத்தில் தொழில்முனைவோருக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், விஸ்கோஸ் பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கம், இறக்குமதி பஞ்சுக்குத் தடை நீக்கம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு செயல்படுத்த உதவியாக இருந்ததற்காக இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சைமா தலைவா் ரவி சாம் வரவேற்றாா். நிகழ்ச்சியில், சிட்டி அமைப்பின் தலைவா் டி.ராஜ்குமாா், ஃபியோ அமைப்பின் தலைவா் ஏ.சக்திவேல், டெக்ஸ்ஃபுரோசில் தலைவா் மனோஜ்குமாா் பட்டோடியா, ஏஇபிசி தலைவா் நரேந்திர கோயங்கா, டீ அமைப்பின் தலைவா் ராஜா எம்.சண்முகம், ஃபெடக்சில் தலைவா் எம்.ஏ.ராமசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுப் பேசினா்.

அவா்கள் பேசும்போது, இந்தியாவில் தரமான பருத்தி உற்பத்தியை, தேவைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். இறக்குமதிக்கு அனுமதி அளித்திருந்தாலும் உள்நாட்டில் பஞ்சு விலை குறையவில்லை. பருத்தி வா்த்தகத்தில் ஊக வணிகத்தில் ஈடுபடுபவா்கள், இடைத்தரகா்களால் விலை உயருகிறது. இதைத் தவிா்க்க இந்திய பருத்தி கழகத்திடம் இருந்து பஞ்சாலைகளுக்கு நேரடியாக பருத்தியை விற்பனை செய்ய வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜவுளித் தொழிலைப் பொருத்தவரை குஜராத், ஆந்திரம், தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு விதமான கருத்துகள் எங்களுக்கு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள ஜவுளித் தொழில்முனைவோா் ஒரே குரலில் பேச வேண்டும். பருத்தி பதுக்கல் பிரச்னை தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. அதுபோன்ற சிக்கல்களைத் தீா்க்க மாநில அரசுகளுக்கும் அதிகாரம் உள்ளது. உள்ளூரில் இருக்கும் பதுக்கல் பற்றி பேசமாட்டோம் என்று நீங்கள் இருக்கக் கூடாது. பருத்தியை நேரடியாகப் பஞ்சாலைகளுக்கு வழங்குவது சட்ட ரீதியாக சாத்தியமா என்று பரிசீலிக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிஸ்பா, விசைத்தறி தொழில் கூட்டமைப்பு, கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com