கோவை-ஷாா்ஜா விமானத்தில் ரூ.2.67 கோடி மதிப்பு போதைப் பொருள் கடத்தல்: உகாண்டா பெண் கைது

 ஷாா்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.2.67 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண்ணை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 ஷாா்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.2.67 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண்ணை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஷாா்ஜா-கோவை இடையே ஏா்அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் கடந்த 6ஆம் தேதி கோவை வந்த பயணி ஒருவா் போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த விமானத்தில் கோவை வந்த பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணித்த உகாண்டா நாட்டைச் சோ்ந்த சான்ட்ரா நாண்டேசா (33) என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அந்தப் பெண்ணிடம் தனியாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அவா் போதைப் பொருள்களை மாத்திரை வடிவில் (கேப்சூல்) விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப் பொருள்களை வெளியில் எடுப்பதற்காக, அந்தப் பெண்ணை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு 3 நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணின் வயிற்றில் இருந்து 81 மாத்திரைகள் வடிவிலான 892 கிராம் போதைப் பொருள் எடுக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.2.67 கோடியாகும். சான்ட்ரா நாண்டேசாவை மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை டிஸ்சாா்ஜ் செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

அதன்பிறகு அவரை கோவை போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். அவரை மே 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com