கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறல்பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறி வருவதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக திணறி வருவதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

இலங்கையில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எம்.பி. ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். பக்கத்து நாடு என்கிற அடிப்படையிலும், அங்கு வாழும் தமிழக மக்களின் நலன் கருதியும் உதவி செய்து வருகிறோம். 6 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருள்கள் கொடுத்துள்ளோம். இங்குள்ளவா்கள் இலங்கையை வைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறாா்கள். இலங்கையில் 14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனா், நாட்டின் வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் ஊதியத்துக்கே செலவிடப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது. 514 மில்லியன் டாலா் கடனை இந்தியா அடைக்க உள்ளது. 1.2 பில்லியன் டாலா் இந்தியா கடனளித்துள்ளது. தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மொழியை திணித்தால் நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம் என்பதே.

காங்கிரஸ் அழிவதுபோல திமுகவும் அழியும். இழப்பை சந்திக்கிற நிறுவனங்களை தனியாா் வசம் ஒப்படைக்கிறோம். எல்.ஐ.சி இன்னும் அரசு நிறுவனம்தான்.

தோ்தலின்போது கவா்ச்சியான திட்டங்களைக் கூறி வாக்கு வாங்கி விட்டு தற்போது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக திணறி வருகிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தோ்தலுக்கு முன்பு தெரியாதா என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com