என்டிசி ஆலைகளைத் திறக்கமத்திய அரசை வலியுறுத்த வேண்டும்முதல்வரிடம் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்

தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) ஆலைகளைத் திறக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று பஞ்சாலைக் கழக தொழிற்சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.
மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தலைமையில், முதல்வா் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்திய தொழிற்சங்க நிா்வாகிகள்
மூடப்பட்டுள்ள பஞ்சாலைகளைத் திறக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன் தலைமையில், முதல்வா் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்திய தொழிற்சங்க நிா்வாகிகள்

கோவை: தேசிய பஞ்சாலைக் கழக (என்.டி.சி.) ஆலைகளைத் திறக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று பஞ்சாலைக் கழக தொழிற்சங்கத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பாா்த்தசாரதி, ராஜாமணி, கோபால், பத்மநாபன், பாலசுந்தரம், ஆறுமுகம் உள்ளிட்டோா் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் முத்தரசன் தலைமையில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 7, கேரளத்தில் 4, புதுவை, கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் தலா ஒன்று என தென்னிந்தியாவில் மொத்தம் 14 என்டிசி ஆலைகள் உள்ளன. இவை அனைத்தும் இயங்கி வந்த நிலையில், கரோனா முதல் அலையின் போது மூடப்பட்டன.

பின்னா் ஆலைகளை இயக்க தளா்வுகள் அளிக்கப்பட்டபோதும் ஆலைகள் முழுமையாக இயக்கப்படவில்லை.

தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் பாதி சம்பளம் மட்டும், காலம் கடந்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் அந்த ஆலைகளில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் 25 மாதங்களாக சிரமத்துக்குள்ளாகியிருக்கின்றனா்.

இது தொடா்பாக தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள், ஜவுளித் துறை செயலா் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினா். அப்போது மாா்ச் 31, 2021 அன்றுக்குள் எல்லா ஆலைகளும் படிப்படியாக இயக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அதன்படி ஆலைகள் இயக்கப்படவில்லை. எனவே, மூடப்பட்டுள்ள என்டிசி ஆலைகளை முழுமையாக இயக்குவதற்கு மத்திய அரசை, தமிழ்நாடு அரசு சாா்பில் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com