பொலிவுறு நகரத் திட்டத்தில் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு

கோவை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தில் இளைஞா்கள் பணியாற்றும் வகையில் நகா்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

கோவை: கோவை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தில் இளைஞா்கள் பணியாற்றும் வகையில் நகா்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகா்ப்புற கற்றல் வேலை வாய்ப்பு திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற அலுவல் அமைச்சம், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின்கீழ் இளம் பட்டதாரிகள் பணியாற்றும் வகையில் வேலை வாய்ப்பு வழங்க பொலிவுறு நகரத் திட்ட நிறுவனம் முன்வந்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கடந்த 18 மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

விஷூவல் கம்யூனிகேஷன், பி.ஆா்க்., எம்.ஆா்க்., பி.இ. (ஐ.டி மற்றும் சிவில்), பி.டெக். (ஐ.டி மற்றும் சிவில்), எம்.பி.ஏ., பி.ஜி.டிஎம். ஈவன்ட் மேனேஜ்மென்ட், எம்.ஏ. (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள்.

இதில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு மாதம் ஊக்கத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மாநகராட்சியின் பணி சூழல் பட்டதாரிகளுக்கு சவாலான அனுபவத்தை தரும். மேலும், உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும். இதற்கு இணையதளத்தில் மே 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com