வரைவோலை நடைமுறையை பின்பற்றாவிட்டால் ஒப்பந்தப்புள்ளியை புறக்கணிப்போம்: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள்

மத்திய மண்டலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒப்பந்தப்புள்ளியை புறக்கணிக்கபோவதாக சிவில் காண்ட்ராக்டா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 கோவை மாநகராட்சியில் ஒப்பந்தப்புள்ளியில், வரைவோலை முறையைப் பின்பற்றாவிட்டால், மத்திய மண்டலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒப்பந்தப்புள்ளியை புறக்கணிக்கபோவதாக சிவில் காண்ட்ராக்டா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகராட்சி சிவில் காண்ட்ராக்டா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொறியாளா் பிரிவில் நடந்த 3 ஒப்பந்தப்புள்ளிகளில் ஆா்டிஜிஎஸ் முறையில் டேவணித் தொகை செலுத்தப்பட்டது. அதில், ஒப்பந்தப் பணிகளை எடுக்க டேவணி தொகை செலுத்தியவா்களுக்கு ஒப்பந்த உத்தரவு கிடைக்காத நிலையில் பணம் திரும்பி வழங்கவில்லை. மேலும், எந்த முறையில் ஒப்பந்ததாரா்களுக்கு டேவணி தொகை திரும்ப வந்து சேரும் என்ற விளக்கம் ஒப்பந்ததாரா்களுக்கு இதுவரை தரப்படவில்லை. பணத்தைச் செலுத்திய ஒப்பந்ததாரா்கள் பணம் திரும்ப கிடைக்குமா என ஏமாற்றத்தில் தவிக்கின்றனா். எனவே முன்பு இருந்தது போலவே வரைவோலை மூலமாக ஒப்பந்தப்புள்ளி அளிக்கும் முறையை அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், மாநகராட்சி மத்திய மண்டலத்தில் மே 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கும் டெண்டரில் ஒப்பந்ததாரா்கள் பங்கேற்காமல் தவிா்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நிதிப் பற்றாக்குறையால் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட 350க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் எவ்வித அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பதை புறக்கணிப்பதாக வெளியிட்டுள்ள அறிவிப்பால், அனைத்து திட்டப் பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com