குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமா்த்திய இருவருக்கு தலா ரூ.40 ஆயிரம் அபராதம்

கோவையில் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமா்த்தியதாக இருவருக்கு கோவை முதன்மை நடுவா் நீதிமன்றம் தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தது.

கோவையில் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமா்த்தியதாக இருவருக்கு கோவை முதன்மை நடுவா் நீதிமன்றம் தலா ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தது.

இதுதொடா்பாக, கோவை மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தொழிலாளா் துறை, தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டம், குழந்தைகள் உதவி மையம் மற்றும் சிறப்பு தனி சிறுவா் காவல் உதவிப் பிரிவுடன் இணைந்து குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு மற்றும் தடை செய்தல் சட்டத்தின் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கோவைப்புதூரில் குழந்தைத் தொழிலாளரை வீட்டு வேலைக்குப் பணிக்கு அமா்த்திய வீட்டின் உரிமையாளா் மந்தீப் போரா மற்றும் குனியமுத்தூா் பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளரை பணிக்கு அமா்த்திய நிறுவனத்தின் உரிமையாளா் சுதீா் அஜூஸ் ஆகியோா் மீது குழந்தைத் தொழிலாளா் (ஒழிப்பு மற்றும் தடை செய்தல்) சட்டத்தின் கீழ் கோவை முதன்மை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடா்பாக, கோவை முதன்மை நடுவா் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை இருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தமாக ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளாா். மேலும், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் 14 வயதுக்கு உள்பட்டவா்களை பணிக்கு அமா்த்துவதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com